ஓடிடியில் ரிலீசான ஜெயம் ரவியின் ‘பூமி’ படம் சில மணி நேரத்தில் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் பூமி . இது நடிகர் ஜெயம் ரவியின் 25வது படம். இயக்குனர் லக்ஷ்மண் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா , சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் . கடந்த வருடம் மே மாதம் வெளியாகவிருந்த இந்தப் படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போனது .
இதையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று பூமி படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசானது . ஆனால் வெளியான சில மணி நேரங்களிலேயே திருட்டுத்தனமாக பூமி படம் இணையத்தில் வெளியாகியுள்ளது . இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக விஜய்யின் மாஸ்டர் படமும் நேற்று ரிலீஸ் ஆவதற்கு முன்பே காட்சிகள் இணையத்தில் கசிந்து திரைத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.