Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கணவரின் விசேஷ நாள்…. குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

தாய் தனது இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, திருமுல்லைவாயல் பகுதியில் இருக்கும் ஜாக் நகரில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கமலேஷ் என்ற மகனும், ரக்சனா என்ற மகளும் உள்ளனர். இதில் முனியப்பன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 22-ஆம் தேதி இந்துக்கல்லூரி-ஆவடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் மோதி முனியப்பன் பலியானார்.

இந்நிலையில் தனது கணவர் இறந்த துக்கத்தில் இருந்த ஐஸ்வர்யா, ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து ஐஸ்வர்யாவின் கணவருக்கு விசேஷம் நடக்கவிருந்ததால், அவரது உறவினர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே அவர்களது வீட்டில் வந்து தங்கியுள்ளனர். அப்போது திடீரென ஐஸ்வர்யா தனது 2 குழந்தைகளுடன்  வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார். அதன்பின் ஐஸ்வர்யா தனது குழந்தைகளுடன் திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோவில் பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள்  3 பேரையும்  பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன்பிறகு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அந்த மூன்று பேரும் எவ்வித பாதிப்புமின்றி  காப்பாற்றப்பட்டுள்ளனர்.

Categories

Tech |