Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஓட்டலில் இப்படி பண்றீங்க…. வசமாக சிக்கிய தொழிலதிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஓட்டலில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தொழிலதிபர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள ஏ.வி ஆர் ரவுண்டானா பகுதியில் பிரபல நட்சத்திர ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி இருக்கின்றது. இங்கு இயங்கி வரும் மசாஜ் சென்டருக்கு வினோத்குமார் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள பெண்கள் அவரை பாலியல் தொழிலுக்காக அழைத்துள்ளனர். ஆனால் வினோத் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து வினோத்குமார் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் தங்கும் விடுதிக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில்  பெங்களூரைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் போன்றோரை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது.

மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தொழிலதிபர்களான சேலம் முள்ளுவாடிகேட் பகுதியைச் சேர்ந்த தீரஜ்குமார் மற்றும் அம்மாபேட்டையில் வசித்து வரும் பிரபு போன்றோர் ஸ்பா எனப்படும் இந்த சென்டரை நட்சத்திர ஓட்டலில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பெண்கள் 3 பேரையும் காவல்துறையினர் மீட்டு காப்பகத்தில் தங்கவைத்தனர். அதன்பின் மசாஜ் சென்டர் நடத்தி வந்த தொழிலதிபர்கள் தீரஜ்குமார் மற்றும் பிரபு ஆகியோரை கைது செய்தனர். இதனைதொடர்த்து தீரஜ்குமார் மற்றும் பிரபு மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறைச்சாலையில் அடைத்தனர்.

Categories

Tech |