ஆஸ்கார் விருதுக்கு தேர்வான சூரரைப்போற்று இறுதிச்சுற்றில் இடம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து ஆஸ்கார் விருதின் பொதுப் பிரிவு பட்டியலில் சூரரைப்போற்று படம் இடம் பெற்றிருந்தது.
அதன்பிறகு ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்ற 366 திரைப்படங்களிலும் சூரரைப் போற்று தகுதி பெற்றது. இந்நிலையில் ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஆனால் அதில் சூரரை போற்று படம் இடம் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைத்துள்ளனர்.