Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கமா ….? வெளியான முக்கிய தகவல் ….!!!!

இந்திய  ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கபட  இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

7-வது டி 20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்த நிலையில் ,தனது 2-வது போட்டியிலும் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது இதனால் இந்திய அணியின் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது .மேலும் கேப்டன் விராட் கோலிக்கு இது முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது .ஏனெனில் ஐசிசி போட்டிகளில் இதுவரை கேப்டனாக விராட் கோலி ஒருமுறை கூட கோப்பையை வென்று கொடுக்கவில்லை . அதோடு நடப்பு டி20 உலக கோப்பை போட்டிக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து அவர் விலக உள்ளார்.

இதனால் டி20 உலக கோப்பையை வென்று கொடுத்து விட்டு வெளியேறலாம் என்ற கட்டாயம் இருந்தது.ஆனால் தற்போது இதற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது .மேலும் கடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி சொதப்பியதற்கு கேப்டன் விராட் கோலியின் செயல்பாடு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது .ஏனெனில் பேட்டிங் வரிசையில் மாற்றம், பவுலிங் தேர்வு என விராட் கோலி மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது .இதனிடையே ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட்கோலி நீக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் பிசிசிஐ-யின்  உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் தலைவர் கங்குலி ,செயலாளர் ஜெய் ஷா உட்பட மூத்த அதிகாரிகள் கோலியின்  கேப்டன்சி குறித்து முடிவெடுக்க உள்ளனர். மேலும் இந்த ஆண்டு இந்திய அணிக்கு எந்தஒரு ஒருநாள் தொடரும் இல்லை .அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர்  வரையிலான ஒருநாள் தொடர் எதுவும் அறிவிக்கப்படவில்லை .அதோடு இடையில் டி20 போட்டிகளில் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .எனவே இந்த கால இடைவெளியில் இந்திய அணியின் ஒருநாள் தொடருக்கான புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |