கடந்த ஒரு வாரமாக குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்வதை தடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டு மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் குழாய் உடைந்து கடந்த 1 வாரமாக தண்ணீர் வீணாகி சென்று கொண்டிருக்கிறது. மேலும் குழாய் உடைந்த இடத்தில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆகவே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து பள்ளத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.