முதலமைச்சர் அறிவிப்பின்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண உதவி தொகை 4 ஆயிரம் வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திரு மு. க. ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் அவர் அறிவித்த படியே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்கட்டமாக ரூபாய் 2000த்திற்கான டோக்கன் இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படுகிறது. இதனையடுத்து ரேஷன் கடைகளில் பொதுமக்கள் அதிகமாக கூடினால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் ஒரு நாளைக்கு 200 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்ட தேதியில் பொதுமக்கள் வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை முறையாக பின்பற்றியும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.