Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘ஒரு காலத்துல எப்படி இருந்தாரு’ … ‘இப்படி பாக்க வச்சுட்டாங்க’ …! இணையத்தில் கண்கலங்க வைத்த புகைப்படம் …!!!

இந்த சீசன் ஐபிஎல் தொடரில் இருந்து ,சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ,டேவிட் வார்னர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

ஐபிஎல் தொடரில் 8 அணிகளில் ஒன்றான, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இருந்து வந்தார். இந்த சீசனில் அவர் தலைமையில் நடைபெற்ற 5 போட்டிகளில் , ஹைதராபாத் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று,              4 தோல்விகளைச் சந்தித்தது. இதனால்  அணியில் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக , அதே அணியில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து வீரரான கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஆனால் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்தது. அதோடு வார்னர் பிளேயிங்  லெவனிலும் இடம் பெறவில்லை.இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது .அதுமட்டுமில்லாது  நேற்று நடந்த போட்டியில் வீரர்களுக்காக, வார்னர் தண்ணீர் பாட்டிலை, கொண்டு வந்த காட்சி ரசிகர்களிடையே மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது . தற்போது அது தொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு, தங்களது  வேதனையை பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |