Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே டெஸ்டில் 14 விக்கெட் …..! புதிய சாதனை படைத்த அஜாஸ் பட்டேல் …..!!!

இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 14 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் இந்திய அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார்.இதன்மூலம் 2-வது டெஸ்ட் மொத்தமாக 225 ரன்கள் விட்டுக்கொடுத்து 14 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய அசத்தியுள்ளார்.இதற்கு முன்பாக கடந்த 1980-ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் இயான் போத்தம் இதே மும்பை மைதானத்தில் 106 ரன்கள் விட்டுக்கொடுத்து 13 விக்கெட் கைப்பற்றியதே இந்திய அணிக்கு எதிராக ஒரு வீரரின் சிறந்த பந்துவீச்சாக  இருந்தது. தற்போது 41-ஆண்டு கால சாதனையை அஜாஸ் படேல் முறியடித்துள்ளார்.

Categories

Tech |