யு.பி.எஸ்.சி தேர்வு எழுத தவறியவர்களுக்கு மறுபடியும் வாய்ப்பு அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்திய ஆட்சிப் பணியான ஐ.ஏ.எஸ், போலீஸ் பணியான ஐ.பி.எஸ், இந்திய வெளியுறவு பணியான ஐ.எப்.எஸ் மற்றும் சிவில் சர்வீஸ் போன்ற தேர்வுகளை யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகள் குறிப்பிட்ட தேதிக்கு பதிலாக கொரோனா அச்சம் காரணமாக வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் இந்த தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்று காரணமாக கடைசி தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதோடு வயதை கடந்தவர்கள், மீதமுள்ளவர்கள் மற்றும் வேறு காரணங்களுக்காக தேர்வு எழுதாமல் போனவர்களுக்கு எந்த தயவும் அளிக்க முடியாது என்றும் அந்த மனுவில் கூறியுள்ளனர். இந்நிலையில் யு.பி.எஸ்.சி தேர்வு எழுத கூடுதலாக வாய்ப்பு வழங்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டு, இது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர்.