அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு வரை அமைக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு மருத்துவமனைகளிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு வரை அமைப்பது அவசியம் என்றும் தலைமைச் செயலர் குறிப்பிட்டிருக்கிறார். அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த வலியுறுத்தலை விடுத்திருக்கிறார்.
அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கான கழிப்பறைகள் இல்லாவிட்டால் அங்கு உடனடியாக கழிப்பறைகளை அமைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். தூய்மை பணியாளர்கள் இளைப்பாறவும், உணவு உண்ணவும் அவருக்கான வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.