செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, திமுக 1, 2 சதவீதம் நல்லதாக செய்தால் கூட பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை எங்களுக்கு, ஓபிஎஸ்ஸும், அவருடைய செல்வனும் திமுக அரசை பாராட்டிக் கொண்டிருக்கிறார் என்றால், தொண்டர்களை புண்படுத்துகிறார் என்று தானே அர்த்தம். திராவிட முன்னேற்ற கழகத்தை வீழ்த்த வேண்டிய கடமை இருக்கிறது,
மதிப்பிற்குரிய மு.க. ஸ்டாலின் இதே மதுரையில் சொல்கிறார் எடப்பாடியார் தற்காலிக பொதுச் செயலாளர். இது யாருடைய தூண்டுதல், ஓபிஎஸ் சொல்கின்ற வாசகத்தை தானே இவரும் சொல்கிறார், அப்ப திமுகவுடன் தொடர்பு இருக்கா? இல்லையா?
ஸ்டாலினுடைய வார்த்தைகளும், அண்ணன் ஓபிஎஸ் உடைய வார்த்தைகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. அந்த வகையில் தான் இன்றைக்கு ஸ்டாலின் இந்த இயக்கத்தின் மேல் அதிருப்தியில் இருக்கின்ற சில பேரை தூண்டிவிட்டு, அதிமுகவில் இருக்கின்ற சில பேரை இன்னும் வெளியே எடுக்க முடியுமா என்று முயற்சிக்கிறார். அந்த முயற்சிக்கு மதிப்பிற்குரிய ஓபிஎஸ் பழியாகிறார் என தெரிவித்தார்.