Categories
அரசியல் மாநில செய்திகள்

திக்.. திக்… ADMK…! ஓபிஎஸ் வந்துவிடக் கூடாது..! டிஜிபி ஆபீஸ் ஓடிய ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  சிவில் கோர்ட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம், அது வேற விஷயம். ஆனால் ஹை கோர்ட்டினுடைய உத்தரவு என்ன ? திரு ஓ.பி.எஸ் அவர்கள்,  திரு ஒருங்கிணைப்பாளர் அவர்கள் நீக்கம் பொதுக்குழுவில் எடுத்த முடிவு செல்லும் என்கின்ற அந்த தீர்ப்பு தான் இப்போதைக்கு இறுதியானது.

எனவே அந்த அடிப்படையில் வந்து அவர்கள் வந்து கோர் பண்றது ஒரு சிவில் வழக்கு. அதையும் இதையும் ஒருங்கிணைக்க கூடாது. கட்சியினுடைய அலுவலகம் குறிப்பாக புரட்சித்தலைவர் மாளிகைக்கு, அவர்கள் செல்வதற்கு ஒரு அடிப்படை உறுப்பினர் கிடையாது. ஒரு உறுப்பினர் இல்லாதவர் எப்படி புரட்சி தலைவர் மாளிகைக்கு செல்ல முடியும் ? செல்வதற்கு முகாந்திரம் இல்லையே.

அதனால்தான் சம்பந்தமில்லாமல் வேண்டுமென்ற சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள், அதற்கு நீங்கள் வந்து எங்கள் கட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறோம். வேண்டுமென்றே சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி, இது போல் ஒரு அமைதிக்கு குந்தகம் விளைவித்து, கட்சிக்கு, ஓபிஎஸ்க்கும் தொடர்பில்லாத நிலையில், இருவர் அமரவு கொண்ட நீதிபதிகள் வந்து நாங்கள் தான் இயக்கம்.

அண்ணன் எடப்பாடியார் தான் இடைக்கால பொதுச்செயலாளர் என்று அடிப்படையில் ஒரு நல்ல தீர்ப்பை கொடுத்து இருக்கக்கூடிய நிலையில், ஓபிஎஸ் தரப்பு முயற்சிப்பதால் அது சட்டவிரோதம் செயல், அதை தடுத்து நிறுத்த வேண்டும், தலைமை கழகத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் இதுதான் எங்களுடைய கோரிக்கை என தெரிவித்தார்.

Categories

Tech |