Categories
அரசியல் மாநில செய்திகள்

”உங்களை போல போஸ் கொடுக்க வரல” ஸ்டாலினுக்கு OPS பதிலடி ….!!

ஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க வரவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அங்குள்ள வீடுகள் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டது. சாலைகள் சேதமடைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை வெள்ளத்தில் மூழ்கி போனது. இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் நீலகிரிக்கு 2 நாட்கள் பயணமாக சென்று வெள்ள பாதிப்பு , சேதாரங்களை ஆய்வு செய்தார். பின்னர் அரசு இயந்திரம் செயல்பட வில்லை அமைச்சர்கள் பப்ளிசிட்டி_க்காக வந்துள்ளனர் என்று விமர்சித்தார்.

Image

இதற்க்கு பதிலுக்கு பதில் தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் மாறி மாறி குற்றம் சாட்டினார்.ஸ்டாலின் சீன் போட செல்கின்றார் என்றெல்லாம் குற்றசாட்டு எழுந்தநிலையில் இன்று வெள்ளம் பதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசும் போது , நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 1,350 வீடுகள் சேதமடைந்துள்ளன.முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு பதில் மாற்று வீடுகள் கட்டித்தரப்படும். விளைநிலங்களில் பாதிப்புகளை சரிசெய்ய ரூ.4.37 கோடி ஒதுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Image

தொடர்ந்து பேசிய OPS , மழை, வெள்ளத்தால் ரூ.199.21 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மத்தியக் குழுவை அனுப்பி நீலகிரியில் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.ஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க வரவில்லை.மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ளேன் என்று துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |