Categories
அரசியல்

“கட்டுக்கடங்காமல் எகிறிய மணல் விலை”…. இத முதல்ல சரி பண்ணுங்க…. தமிழக அரசை வலியுறுத்திய ஓபிஎஸ்…!!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசு மணல் விலையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசை வலியுறுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, கட்டுமானப் பொருட்களில் மிகவும் முக்கியமானது கம்பி, செங்கல், மணல், சிமெண்ட், மரம். இவற்றை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் கொண்டு வர வேண்டும்.

இதன் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பொருட்கள் நியாயமான விலையில் விற்கப்படுவதாக தெரியவில்லை. கட்டுக்கடங்காத விலையில் விற்கப்படுகிறது.

சமீபத்தில், மக்களும் ஏழை எளியோரும் இணையத்தின் மூலமாக மணலுக்குரிய விலையைக் கொடுத்து எந்த சிரமமும் இல்லாமல் மணலை கொண்டு செல்லும் விதத்தில் காலை எட்டு மணியிலிருந்து மாலை 2 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் விண்ணப்பம் தெரிவித்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது போக மீதியை மாலை 2 மணியிலிருந்து  5 மணி வரை, பதிவு செய்த லாரி உரிமையாளர்கள் கொடுக்கப்படும் என்று 7-1-2022 அன்று தமிழக அரசாங்கத்தின் செய்தித்தாளில் கூறப்பட்டிருந்தது. ஒரு யூனிட் மணலின் விலை ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயித்திருப்பதாக பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட சமயத்தில், வெளிச்சந்தையில் 8500 ரூபாய்க்கு ஒரு யூனிட் மணல் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது சென்னை போன்ற பல பகுதிகளில் தனியார் நிறுவனங்களில் 13,600 ரூபாய்க்கு விற்கப்படுவது, வீடு கட்டும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே, முதல்வர் இதில் கவனத்தை செலுத்தி வெளிச்சந்தையில் விற்கப்படும் மணலின் விலையை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக வின் சார்பாக வலியுறுத்திக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |