Categories
அரசியல்

“இந்த வருடத்தோட ஆரம்பமே இப்படி இருக்கு”…. வேதனையுடன் ஓபிஎஸ் வைத்த முக்கிய கோரிக்கை….!!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் பட்டாசு ஆலை பணியாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வலியுறுத்தியிருக்கிறார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் புது வருட தொடக்கத்திலேயே ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அடுத்து இருக்கும் வடுகபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட களத்தூர் என்ற கிராமத்தில் ஆர்கேவிஎம் என்ற பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 4 பேர் பலியான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

அந்த ஆலையில் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு பின் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். மூன்று நாட்களுக்கு முன்பாக தான் அந்த ஆலை இயங்க தொடங்கியது. அப்படியெனில், இரண்டு மாதங்களாக அந்த பட்டாசு ஆலை மூடப்பட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்குப் பின் பட்டாசு ஆலை திறக்கப்பட்டிருக்கிறது.

திறப்பதற்கு முன் பாதுகாப்புக்குரிய நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டிருக்க வேண்டும். நடவடிக்கைகள் சரியாக செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் கண்காணித்திருக்க வேண்டும். ஆனால் இவை கடைபிடிக்கப்பட்டதா? என்று தெரியவில்லை.

அந்த ஆலையின் உரிமையாளர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். எனினும் பட்டாசு ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வரக்கூடிய காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் படுகாயமடைந்த மக்களுக்கு அந்த ஆலையின் நிர்வாகத்திடம், இழப்பீடு பெற்றுக் கொடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |