செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்சின் ஆதரவாளரான புகழேந்தி, தர்மயுத்தம் நடத்தினோம், அதோடு மட்டும் இல்லையே, இந்த முதலமைச்சர் ஊழல்வாதி என்று சொன்னார், 11 எம்.எல்.ஏ எதிர்த்து வாக்களித்தார்கள் என்று சொன்னார். அதை ஏன் விட்டு விட்டீர்கள். அதற்கு பின்னால் இதே தங்கமணி, வேலுமணி இரண்டு பேரும் பிரதம மந்திரி கூப்பிடுகிறார்கள் என்று அழைத்துச் சென்று, சமாதானம் செய்து வைத்தார்கள் என்பதை வெளிப்படையாக சொல்லி விட்டார்கள்.
தர்ம யுத்தத்தில் இவ்வளவு குற்றச்சாட்டுகளையும் சொன்னவர் தலைமை ஏற்க வேண்டும் என்று ஏன் காலை? கையைப் பிடித்து அழைத்து வந்தீர்கள். இது யாருடைய தவறு ? அப்போது ஏன் ஏற்றுக் கொண்டீர்கள். பிறகு ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் என்று ஏன் சொன்னீர்கள்? இது என்ன நியாயம்?உங்களுக்கு நன்றாக தெரியும் தர்மயுத்தத்தில் யார் தூது விட்டார்கள் ? தாமதமாக வர விடாம அடிச்சு மோதிக் கொண்டு அங்கே நின்று ஜேசிபி பிரபாகரன் அத்தனை பேரையும் பிடித்து, பேசி பேசி வர வரைக்கும் பக்கு பக்கு ஒவ்வொருவரும்,
ஒவ்வொரு குற்றச்சாட்டு சொல்லி இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்டார்களே.. பழனிச்சாமி அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் பெருமையோடு அழைத்தார். அதற்கு நீங்கள் நியாயமாக சொல்ல வேண்டியது தானே ? நீதிமன்றத்தின் தீர்ப்பையும் தவறாக பேசுகின்ற நிலையிலே பேசி, நான் வரவில்லை பேசுவோம் என்று சொல்லலாம்.ஆனால் அந்த தலைவனை கிண்டல் பண்ணுவது நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதற்கு தயாராக இல்லை.
அவருக்கு பெரிய பெருந்தன்மை என்ன திட்டினாலும் பரவாயில்லை, ஏதாவது சொன்னாலும் பரவாயில்லை என்று அண்ணன் நினைக்கிறார். ஆனால் எங்களுக்கு அப்படிப்பட்ட மனநிலை இல்லை. ஏனென்றால் நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியும்?