சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த, அதிமுகவின் பொதுக்குழு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை இன்று வாசித்தார். அதில், ஜூன் 23ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலை தான் இருக்க வேண்டும் என்றும், ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.
அதற்கு 30 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்ற மிக முக்கியமான தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கி இருக்கிறார். இதனால் ஓபிஎஸ் இல்லத்தில் இருக்கக்கூடிய தொண்டர்கள் மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.