Categories
மாநில செய்திகள்

OPS-க்கு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்….. “வேணும்னா அங்க போய் வாங்கிக்கோங்க”….. அதிரடி ட்விஸ்ட்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே இருக்கின்றது. கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுகுழுவில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அன்றைய தினம் ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் சென்றதால் பெரிய கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து அதிமுக அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது .பின்னர் சென்னை ஐகோர்ட்டில் அதிமுக அலுவலகத்தின் சாவி எடப்பாடி இடம் ஒப்படைக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன் பிறகு அதிமுக பொதுக்குழு செல்லாது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்த நிலையில் , நீதிபதிகள் அடங்கிய அமர்வு அதிமுக பொதுகுழு செல்லும் என்று மீண்டும் தீர்ப்பளித்து உத்தரவு பிறப்பித்தது. எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இதனால் பெரும் கொண்டாட்டத்தில் இருந்தனர். எடப்பாடி பழனிச்சாமி இரண்டு மாதங்கள் கழித்து நேற்று தலைமை அலுவலகத்திற்கு சென்று கட்சி பணிகளில் ஈடுபட்டார்.

சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் வழங்கிய இந்த தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கட்சி அலுவலகத்திற்கு சென்றது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் தலைமையில் அவர்களும் அதிமுக அலுவலகத்திற்குள் செல்ல முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறார்கள்.

இதற்காக சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் மனு அளித்திருந்த நிலையில், காவல்துறை அனுமதி தர மறுப்பு தெரிவித்துள்ளது. தலைமை அலுவலகம் செல்வதற்கு ஓபிஎஸ் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று வந்தால், பாதுகாப்பு தர தயாராக இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் தரப்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்கிறது.

Categories

Tech |