அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கட்சியே தற்போது இரண்டாகி நிற்கிறது. இந்நிலையில் அதிமுகவின் தற்போதைய நிலையை பார்த்தால் வருத்தமாக உள்ளது என்று டிடிவி தினகரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.நாங்கள் நரி கூட்டத்தில் சேர விரும்ப மாட்டோம் எனக்கூறி அவர், தர்மயுத்தம் தொடங்கிய போது எனது நண்பர் ஓபிஎஸ்-ஐ சந்தித்தேன். அதற்குப் பிறகு சந்திக்கவில்லை. பதவி கொடுத்த பிறகு தான் இபிஎஸ் குணம் தெரிந்தது. இன்னும்கூட அதிமுகவில் எனது ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என்று ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.
Categories
OPSஐ சந்தித்தேன்…. அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள்…. டிடிவி தினகரன் புதிய ட்விஸ்ட்…..!!!
