பிரான்சில் புதிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்ப்பு ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
பிரான்ஸில் காவல்துறையினரின் கடமை படமாக்குவது, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என்ற வகையில் புதிய பாதுகாப்பு சட்டத்தை அந்நாட்டு அரசு விரைவில் அமல்படுத்தப் போவதாக திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் போராட்டம் வன்முறையாக மாறியதால் போலீசார் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தினர்.
பாதுகாப்பாக மசோதாவை எதிர்பாராத ஏராளமான மக்கள் திரண்டதால் மசோதாவை மீண்டும் எழுதுவதாக உறுதியளித்தனர். ஊரடங்கு விதிகளை மீறி காரணமின்றி வெளியில் வருபவர்களுக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்று பாரிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சட்டம் இயற்றப்பட்டால் போலீசார் மக்களை கண்காணிக்க ட்ரோன்கள் மற்றும் கெமராக்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.ஆகையால் இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது. இருப்பினும் இச்சட்டம் காவல்துறையை சிறப்பாக பாதுகாக்கும் என்று பிரெஞ்சு அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் ஆய்வாளர்கள் முன்மொழியப்பட்ட சட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறுகின்றனர்.