Categories
தேசிய செய்திகள்

ஓ.பி.சி. இடஒதுக்கீடு – ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பு – டிடிவி தினகரன்…!!

மருத்துவ படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

திரு டிடிவி தினகரன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் மருத்துவப் படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த பாதிப்புக்குக் காரணமான நிலைப்பாட்டை எடுத்த மத்திய அரசுக்கும், மறைமுகமாக அதற்குத் துணைபோன பழனிசாமி அரசுக்கும் 2007 ஆம் ஆண்டு மத்திய அரசில் அங்கம் வகித்த போது இந்த சமூக அநீதியை ஆரம்பித்து வைத்து இப்போது நாடகமாடும் திமுகவுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு உரிமையை காப்பாற்றுவதற்கான சட்டப்படியான நடவடிக்கைகளில் இனியாவது பழனிசாமி அரசு அக்கறையோடு செயல்பட வேண்டும் என்றும் திரு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |