மடத்துக்குளம் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுப்பது என்று ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் காவியா அய்யப்பன் தலைமை தாங்கினார். இதனையடுத்து ஒன்றிய ஆணையாளர் மகேந்திரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஈஸ்வரசாமி போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் கூட்டத்தில் ஒன்றிய ஊராட்சிகளில் உள்ள 8 அங்கன்வாடி மையங்களில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி அமைத்தல், 3 ஊராட்சிகளில் கழிவுநீர் வடிகால்கள் அமைத்தல் போன்ற 77 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ் நிர்வாகம், சதீஷ்குமார், மண்டலம், விவேகானந்தம் சத்துணவு, நாகலிங்கம் ஊராட்சிகள், உதவி பொறியாளர்கள் கார்த்திக் குமார், கார்த்திக் ராஜா, எத்திராஜ் தணிக்கை, சீனிவாசன் மண்டலம், சாந்தி மண்டலம் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலதி போன்றோர் கலந்து கொண்டனர்.