மதுரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
முன்னெச்சரிக்கை கருதி அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள குன்றத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் கிருஷ்ணன். இன்று காலை அவரையும் அவரது உறவினரான முனியசாமி என்பவரையும் ஒரு மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் பலரும் அங்கு திரண்டதால் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு மேற்கொண்டு அசம்பாவிதங்கள் எதும் நிகழ்ந்து விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.