ஊராட்சி செயலாளரை கலெக்டர் பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ம் ரெட்டியூர் ஊராட்சியில் கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார். அப்போது ராணிப்பேட்டை கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களிடம் கடந்த ஆண்டு 100 நாள் வேலை கொடுக்கப்பட்டதா என்றுகேட்டறிந்துள்ளார். இதனையடுத்து வேலை அட்டையில் ரேஷன் கார்டு விவரங்கள் மற்றும் வேலை கொடுத்ததற்கான விவரங்கள் முறையாக பதிவு செய்யாமல் இருப்தை கலெக்டர் கண்டறிந்துள்ளார். மேலும் பணியாளர்கள் கொரோனா பாதிப்பு விதிமுறைகளான கிருமிநாசினி, வெப்பநிலை பரிசோதனை மற்றும் முகக்கவசம் அணியாமல் இருப்பதை பார்த்து விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்பின் மல்லிகுட்டை கிராமத்தில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது பயனாளியின் தந்தை பெயரில் இருப்பதனால் மகன் பெயரில் பணி ஆணை அரசின் விதியை மீறி வழங்கப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளார். இதனைதொடர்ந்து ஊராட்சி செயலாளர் ஆனந்தன் என்பவரை பணியிடை நீக்கம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விநாயகம், மணவாளன் போன்றோர் அவருடன் இருந்தனர்.