தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் பார்வையாளராக மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று அதிமுக அளித்த மனுவை பரிசீலனை செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது . தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
அதனை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பார்வையாளராக மத்திய அரசு பணியாளர்கள் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அதிமுக மனு அளித்திருந்தது. அந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அந்த விசாரணையில், ஊரக உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும், நடத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பார்வையாளராக மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற அதிமுகவின் மனுவை பரிசீலனை செய்து செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.