கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு நடிகை பிரணிதா இதுவரை 75 ஆயிரம் உணவு பொட்டலங்களை வழங்கிருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு:
கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் அனைவரும் வருமானம் இன்றி, வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். பெரும்பாலும் ஏழை எளிய, பாமரமக்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் உணவிற்கு கூட தவித்து வருகின்றனர். இம்மாதிரியான மக்களுக்கு மத்திய, மாநில அரசு, மற்றும் சமூக தன்னார்வலர்களின் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
நடிகை பிரணிதா உதவி:
இந்நிலையில் நடிகர் சூர்யாவுடன் மாஸ், அவரது தம்பி கார்த்திக்குடன் சகுனி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை பிரணிதா சமீபகாலமாகவே தினமும் பசியின் கொடுமையில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு சமைத்து வழங்கி கொண்டிருக்கிறார். ஊரடங்கால் பல நடிகைகள் வீட்டிற்குள் இருந்தபடியே சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் பதிவு செய்வது, ஒர்க்கவுட் செய்வது போன்ற செயல்களை செய்து பொழுதை கழிக்கின்றனர்.
