கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை ஊழியர்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.
சுவிட்சர்லாந்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை போன்ற சலுகைகளை வழங்க முடியாது என்று அங்குள்ள நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதிலும் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்புகளை சந்தித்த இத்தாலியில் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கட்டாயமாக சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆஸ்திரியாவும் ஊழியர்கள் தடுப்பூசி சான்றிதழை சமர்பிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறது.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்து அரசு இந்த தொடர்பான முடிவை அந்தந்த நிறுவனங்களின் கையில் ஒப்படைத்துவிட்டது. ஆனால் நிறுவனங்கள் பாரபட்சம் காட்டுவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சான்றாக சூரிச் மாநிலத்தில் இருக்கும் தனியார் பாதுகாப்பு நிறுவனம் தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்காத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க மறுத்துள்ளது. இது மட்டுமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு மிகக்குறைந்த ஊழியத்தை அளிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தற்போதைய சூழலில் நிர்வாகத்திற்கு எதிராக குரல் கொடுப்பதால் தங்களின் வேலை பாதிக்கப்படும் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சில நிறுவனங்கள் தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்காத ஊழியர்களுக்கு நோய்வாய்ப்பட்டால் வழங்கப்படும் ஊக்கத் தொகையையும் வழங்க மறுத்துள்ளனர். குறிப்பாக ஊழியர்கள் அடிக்கடி கொரோனா பரிசோதனையை மேற்கொள்வதற்காக தங்கள் சொந்த காசில் செலவிடுவது மிகவும் கடினமாகவுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் பல நிறுவனங்கள் தங்களின் முடிவு சரியானது என்று கருத்து கூறி வருகின்றனர்.