Categories
உலக செய்திகள்

ஊடகங்கள்தான் போராட்டத்தை தூண்டுகின்றன பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு…!

நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பதவி விலக கோரி பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கான மகளிர் அமைப்பினர் பங்கேற்றனர்.

பெலாரஸ் நாட்டின் அதிபராக கடந்த 26 ஆண்டுகளாக அலெக்சாண்டர் லூகாஸ்ஸன்கோ பதவி வகித்து வருகிறார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் அவர் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் தில்லுமுல்லு அரங்கேற்றி அவர் வெற்றி பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ஆசிரியை சிகார் நோஸ்கியாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். ஆனால் அவருக்கு ஆதரவு அளித்து பல்லாயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிபர் பதவி விலக கோரி மென்ஸ் நகரில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் ஏராளமான மகளிர் அமைப்பினர் பங்கேற்று பேரணி நடத்தினர். அப்போது அவர்கள் அதிபருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி நடந்து சென்றனர். இதற்கிடையே ஊடகங்கள்தான் போராட்டத்தை தூண்டுகிறன என்று குற்றம் சாட்டிய அதிபர், வெளிநாட்டு செய்தியாளர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கும் பொதுமக்களிடையே மிகுந்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Categories

Tech |