Categories
தேசிய செய்திகள்

‘ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை’…. அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்…. முதல்வரின் அதிரடி அறிவிப்பு….!!

அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தாய்மொழி பாடமாக கற்பிக்கப்பட வேண்டும்.

பஞ்சாபி மொழி குறித்து இரு மசோதாக்கள் அம்மாநில சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாயமாக அம்மாநில மொழிப் பாடமாக்கப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறும் பள்ளி நிர்வாகத்திற்கு சுமார் 2,00,000 அபராதம் விதிக்கப்படும்.

மேலும் அலுவலங்களிலும் அம்மாநில மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் இருக்கும் பெயர்ப்பலகைகளில் அம்மொழிக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். குறிப்பாக தாய்மொழியை வளர்ச்சி அடைய செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |