கனடாவிலுள்ள ஒன்ராரியோ மாகாணத்தில் வரும் புதன் கிழமையிலிருந்து கொரோனா விதிமுறைகளில் இரண்டாம் கட்ட தளர்வுகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் வரும் புதன் கிழமையிலிருந்து வெளியிடங்களில் 25 நபர்களும் கட்டிடங்களுக்குள் 5 நபர்களும் செல்லலாம். உணவகங்களில் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் உணவு உண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகளில் 50% மக்கள் செல்லலாம்.
ஷாப்பிங் மால்களில் இருக்கும் கடைகள் திறக்கப்படவுள்ளது. முடித்திருத்தம் செய்யும் கடைகளில் முக கவசம் அணிந்து கொண்டு 20% வாடிக்கையாளர்கள் செல்லலாம். நூலகங்களில் 20% நபர்களுக்கு அனுமதி. இறுதி சடங்குகள், மதம் தொடர்புடைய நிகழ்ச்சிகள், திருமணங்கள் போன்றவற்றிக்கு 25% மக்கள் செல்லலாம்.
உடற்பயிற்சி மையங்களில் 3 மீட்டர் சமூக இடைவெளியுடன் அனுமதியளிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் நெருங்காமல் விளையாடக்கூடிய விளையாட்டுகளில் எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுத்திடல்கள், குதிரைப்பந்தயம் திரையரங்குகள், வாகன பந்தயங்கள் மற்றும் பொருட்காட்சி திடல்களுக்கு 25% நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.