Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஒன்றினையும் இந்தியா-அமெரிக்கா…. கொரோனாவை தடுக்க புதிய முயற்சி…!!

இந்திய மற்றும் அமெரிக்க அறிவியல் தொழில்நுட்பத்தின் சார்பில் கொரோனா பரவுவதை தடுக்க ஆயுர்வேத மருத்துவ முயற்சி கையாளுவது குறித்து கலந்துரையாடல் காணொளி மூலம் நேற்று நடந்தது. இதில் இரு நாட்டின் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். விவாதம் முடிந்த பிறகு அமெரிக்காவின் இந்திய தூதர் தரன்ஜித் சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது கொரோனாவை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா மற்றும் அமெரிக்கா முழு பங்களிப்புடன் ஈடுபட்டு வருகிறது எனக் கூறினார்.

அதோடு அடுத்த முயற்சியாக இரு நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள் ஒன்றாக சேர்ந்து கொரோனா தடுப்புப்பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.மேலும் இரு நாட்டின் விஞ்ஞானிகள் அவர்களுடைய ஆய்வு சோதனை முடிவுகளை பரிமாறிக் கொள்கின்றனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியாவே மிக சிறந்த நாடாக புகழப்படுகிறது என்று தரன்ஜித் சிங் கூறினார்.

Categories

Tech |