Categories
தேசிய செய்திகள்

நாளை வீட்டில் உள்ள விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்: மத்திய மின் அமைச்சகம்

பிரதமர் வேண்டுகோளின்படி, நாளை வீட்டில் உள்ள விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும் என மத்திய மின் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள், தெருவிளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் விளக்குகளை அணைக்க தேவையில்லை என மத்திய அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், கணினிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், ஏ.சி.க்கள் போன்ற மின்சாதனங்களையும் அணைக்க தேவையில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளது.

நேற்று காலை காணொலி மூலம் மக்களை சந்தித்த பிரதமர் மோடி, ” கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை(5-ம் தேதி) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அனைத்து தீபம், டார்ச், செல்போன் விளக்குகளை வீட்டிற்குள் ஒளிரவிட வேண்டும்” என உரைத்தார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் 21 நாட்கள் ஊரடங்கு நாடுமுழுவதும் கடந்த 25-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இன்று ஊரடங்கு உத்தரவில் 11-வது நாளை மக்கள் எட்டியுள்ளார்கள். இந்த நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் மின்விளக்குகள், மின் சாதனைகளை தவிர்த்து வீட்டில் உள்ள விளக்குகளை மட்டும் அணைக்க மத்திய மின் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |