Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே வருஷம் தான்…! 70% OK ஆகிடுச்சு… எல்லாரும் பாராட்டுறாங்க… குதூகலகத்தில் DMK எம்.பி …!!

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைய கழகத்தின் தலைவர் அவர்களும் மக்களோடு, நடமாடி வளர்ந்த தலைவர் என்ற காரணத்தினால், தேர்தல் அறிக்கையை தயாரிக்கிற போது…  தமிழ்நாட்டில் முலை முடுக்குகளில் எல்லாம் வாழ்கின்ற மக்களின் பிரச்சனைகளை தொகுத்து, அதற்கு தீர்வுகளும் தருகிறோம் என்ற வாக்குறுதிகளை தந்தோம். அந்த வாக்குறுதிகளை நம்பி, மக்கள் எங்களை தேர்ந்தெடுத்தார்கள்.

தேர்ந்தெடுத்ததற்கு பின்னால், வாய்ப்பில்லை, வசதி இல்லை என்று காரணம் சொல்லாமல், நீங்கள் கொடுக்கிற அவகாசம் ஐந்து ஆண்டு காலம்.. ஒரு ஆட்சி ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற போது, அதற்குரிய காலம் ஐந்து ஆண்டு காலம். இந்த காலகட்டத்திற்குள் நீங்கள் எங்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் மறு தேர்தல் வருகிற போது எங்கள் முடிவை நாங்கள் பரிசீலிப்போம் என்ற உரிமை மக்களுக்கு உண்டு.

ஒரு ஆட்சி என்பது நிரந்தரமாக ஒருவரே இருக்க முடியாது, அடிக்கடி தேர்தல் வைப்பதும் சாத்தியமல்ல, எனவே தான் இந்த ஐந்தாண்டு கால கெடுவினை நிர்ணயித்தார்கள். கழகத்திற்கு நீங்கள் தந்த அந்த காலக்கெடு ஐந்து ஆண்டு காலம். ஆனால் ஒரு வருட காலத்திற்குள்ளாகவே சொன்னதில் 70 விழுக்காட்டை நிறைவேற்றிய ஒரே முதலமைச்சர், இன்றைய கழகத்தின் தலைவர் அவர்கள்… அதைத்தான் எல்லோரும் பாராட்டுகிறார்கள். யார் யாருக்கு என்ன வேண்டுமோ, அதை எல்லாம் தருகிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |