உலகிலேயே ஒரே ஒரு தீவில் மட்டும் தற்போது வரை ஒரு நபருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்ற ஆச்சரியமான தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, உலக நாடுகளை புரட்டி போட்டது. இதில் மக்கள் லட்சக்கணக்கில் பலியாகினர். மேலும் பல்வேறு நாடுகளில் பொருளாதாரமும் பாதிப்படைந்தது. இது மட்டுமல்லாமல் சிலர் பணியை இழக்கும் நிலையும் ஏற்பட்டது.
எனினும் செயின்ட் ஹெலினா என்ற ஒரு தீவில் மட்டும் தற்போது வரை ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த 2019 ஆம் வருடத்திலிருந்து, தற்போது வரை கோடிக்கணக்கான மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த தீவில் மட்டும் ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த தீவில் சுமார் 5000 மக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அங்கு ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படாததால் மக்கள் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
முககவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற எந்த கட்டுப்பாடுகளையும் அவர்கள் பின்பற்ற தேவையில்லை. ஆனால், பிறநாடுகளிலிருந்து அங்கு வருபவர்கள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.