24 மணி நேரமும் தொலைக்காட்சிகளில் மோடியை மட்டும் காட்டுகிறார்கள் என ராகுல் காந்தி வேதனையை தெரிவித்துள்ளார்.
நேற்று பீகார் மாநில தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, என்னுடைய பேச்சு இப்போது நடந்து கொண்டிருக்கிறது, மோடியும் பேசுவார். நீங்கள் தொலைக்காட்சியை பாருங்கள். உங்களுக்கு தொலைக்காட்சியில் காங்கிரஸ் தெரியாது, ராகுல்காந்தி தெரியமாட்டார், உங்களுக்கு தொலைக்காட்சியில் வெறும் நரேந்திர மோடி மட்டுமே தெரிவார். நீங்கள் யோசித்து இந்த கேள்வி கேளுங்கள் 24 மணி நேரமும் நரேந்திர மோடியை ஏன் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள் ? 24 மணி நேரமும் நரேந்திரமோடியை காட்டுபவர்கள் ஏன் ராகுல் காந்தியை பற்றி யோசிப்பது கிடையாது ?
ஏனென்றால் விஷயம் மிகவும் சாதாரண விஷயம். நரேந்திரமோடி உங்களுடைய பணத்தை உங்களிடம் இருந்து திருடுகிறார். சிறு வியாபாரிகள், சிறு கடைகளை நஷ்டமடைய வைக்கிறார்கள் . இந்தியாவில் உள்ள மூன்று தொழிலதிபர்களை முன்னேற்றுவதற்காக மோடி பாடுபடுகிறார். அவரிடம் அனைத்து பணத்தையும் அளித்திருக்கிறார். எனவே அவர்கள் 24 மணி நேரமும் நரேந்திரமோடியின் முகத்தை தொலைக்காட்சியில் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மூன்று நான்கு பணக்கார தொழிலதிபர்கள் நரேந்திர மோடியால் நன்றாக இருக்கிறார்கள்.
அவர்கள் 24 மணி நேரமும் நரேந்திரமோடியை டிவியில் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள் ஒரு நடிகரோ, ஒரு நடிகையோ நடனம் இருந்தால் அவர்களுடைய பாடலையும், நடனத்தையும் தொலைக்காட்சியில் காண்பிப்பார்கள். ஆனால் நமது மக்கள் யார் பசியால் இறந்து கொண்டு கொண்டிருக்கிறார்கள். விவசாய நிலம் பறிக்கப்படுகிறது. மக்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது. அதைப்பற்றி தொலைக்காட்சியில் காண்பிக்க மாட்டார்கள்.விவசாயிகளுடைய நிலம் அதிகரிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டரில் நிலங்கள் அவர்களிடமிருந்து அவர் கையகப்படுத்தப்படுகின்றது.
இதை தொலைக்காட்சியில் காண்பிக்க மாட்டார்கள். உண்மையை தொலைக்காட்சியில் காண்பிப்பது கிடையாது. உண்மையை பற்றி கவலை கிடையாது.பீகாரில் உள்ள மக்களிடம் எந்தவிதமான வேலை வாய்ப்பும் இல்லை என்பது உண்மை. பீகாரில் உள்ள தொழிலாளி பசியால் இறந்து கொண்டு இருக்கிறான் இந்த உண்மையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். பீகாரின் மக்களை யார் காப்பாற்ற முடியாது ? இந்த தேர்தல் உங்களுடைய எதிர்காலத்துக்கான தேர்தல். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை கூறுகிறேன்.
காங்கிரஸ் கட்சியின் அரசாங்கம் பீகாரில் ஏற்பட்டால் நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி அளிக்கிறேன்… நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்… அந்த அரசாங்கம் நீங்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்? எந்த மொழியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ? நீங்கள் இந்தியர்கள் என்ற எண்ணம் தான் எங்களுக்கு மேலோங்கி இருக்கும். எங்கள் அரசாங்கம் ஏற்பட்டால் அனைவரின் மரியாதையும் காப்பாற்றப்படும். பீகார் இந்தியாவிற்கு பல விஷயங்களை அளித்திருக்கிறது என்று எனக்கு தெரியும். பஞ்சாபில், சத்தீஸ்கரில், மும்பையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் பீகார் மக்கள். நீங்கள் முடிவெடுக்க வேண்டும்.
பீகார் என்னுடைய அரசாங்கமாக இருக்கும், பீகாரின் விவசாயிகளின் அரசாங்கமாக இருக்கும். பீகாரில் உள்ள இளைஞர்களின் அரசாங்கமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு அரசாங்கம் அமையும். எந்த அரசாங்கமும் பீகாரில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது, அப்படிப்பட்ட அரசாங்கம்தான் பீகாரில் அமையும்.உங்களுடைய விவசாய பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கும். விவசாயிகளிடம், தொழிலாளிகளிடம் பணம் இருக்கும். நான் உங்களுடன் நின்று கொண்டு பீகாரை மாற்றுவதற்கு விரும்புகின்றேன். நீங்கள் வெகு தொலைவிலிருந்து வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நான் நன்றி கூற விரும்புகின்றேன். கடைசியாக ஒன்று கூற விரும்புகின்றேன்.
இந்த நாடு முழுவதும் இதை அறிந்து இருக்கிறது. இன்று இந்தியாவினுடைய ஏறக்குறைய 1600 கிலோ மீட்டர் சீனா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. யாரிடமும் கேளுங்கள் அவர்கள் உங்களுக்கு கூறுவார்கள். நம்முடைய பகுதியில் நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டு இருக்கிறது , அபகரிக்கப்பட்டு இருக்கிறது. நம்மிடம் பூமி இருந்தது, இப்போது சீனாவிடம் நம்முடைய பூமி இருக்கின்றது. நரேந்திர மோடி ஏன் நாட்டு மக்களுக்கு உண்மை சொல்லவில்லை.
நம்முடைய பூமி பிடுங்கப்படவில்லை என்று ஏன் நரேந்திர மோடி கூறினார். 20 போர் வீரர்கள் தங்களுடைய இன்னுயிரை நீத்தார்கள். கடந்த ஆறு வருடங்களாக நரேந்திர மோடி தன்னை மிகத் திறமையானவர்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் நரேந்திர மோடி இந்தியாவை மிகவும் பலவீனமாகி விட்டார். இந்தியாவை ஒரு வலுவற்ற நாடாக மாற்றி விட்டார். இன்று இந்தியாவில் உள்ள விவசாயிகள் மிகவும் துன்பப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் சீனா இந்தியாவை மெல்ல மெல்ல ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார்.