Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆண்கள் மட்டும்தான் அத செய்வாங்களா” பெண்களாலும் எல்லாம் முடியும்…. பிரபல நடிகை பேட்டி….!!!!

பிரபலமான கலர் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக 2 மெகா தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி வருகிற 10-ம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஜமீலா என்ற தொடரும், இரவு 9 மணி அளவில் உள்ளதை அள்ளித்தா தொடரும் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த 2 தொடர்களுமே பெண்கள் சாதிக்க துடிப்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜமீலா தொடரில் ஹீரோயின் ஆக நடிக்கும் தன்வி ராவ் சீரியல் குறித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நான் சீரியலில் மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எப்படிப்பட்ட தடைகள் வந்தாலும் அந்த தடைகளை எல்லாம் தாண்டி தன்னுடைய லட்சியத்தை அடைய துடிக்கும் ஒரு பெண்ணாக நடித்திருக்கிறேன்.

இந்தத் தொடர் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றார். இதனையடுத்து உள்ளத்தை அள்ளித்தா சீரியல் நடிகை வைஷ்ணவியும் சீரியல் குறித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஆண்கள் மட்டும் தான் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற முடியும், பெண்களால் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற முடியாது என்ற கருத்து நிலவுகிறது. இந்த கருத்தை மாற்றி  பெண்களாலும் எல்லாம் செய்ய முடியும் என்பதை வலியுறுத்தும் தொடரில் தான் நான் நடித்துள்ளேன். என்னுடைய அன்பான பயணம் இனிவரும் நாட்களில் அனைத்து பார்வையாளர்களையும் கவரும் என்று நம்புகிறேன் என்றார்.

Categories

Tech |