Categories
அரசியல் கன்னியாகுமாரி

“என்னை இரண்டாக பிளந்தால் மட்டுமே முடியும்” முக.ஸ்டாலின் ஆவேசம்…!!

என்னை இரண்டாக பிளந்தால் மட்டுமே மக்களை மதத்தால் பிரிக்க முடியும் என்ற முக.ஸ்டாலின் கன்னியாகுமாரியில் பேசியுள்ளார்.

வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை   மற்றும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சார வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில்   காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் , மக்களவை தேர்தலுக்காக பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஜீரோ அறிக்கை என்று விமர்சனம் செய்த ஸ்டாலின் திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்றும் மக்களின் மனதில் இருக்கும் கட்சி என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின் , தற்போது மத்திய அரசும், மாநில அரசும் கலெக்‌ஷன், கமிஷன், கரெப்ஷன் என்று  நடந்து கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்னார். இந்திய மக்களை மதத்தால் பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் அது என்னை  இரண்டாக பிளந்தால் மட்டுமே முடியும் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

Categories

Tech |