Categories
மாநில செய்திகள்

7ம் தேதி முதல் வீடு வீடாக சென்று மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு!

7ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படாது என தமிழக அரசு புதிய உத்தரவிட்டுள்ளது. வீடு வீடாக சென்று மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவாமல் தடுக்க ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் விநியோகம் அனைத்து மாவட்டத்திலும் நேற்று முதல் தொடங்கியுள்ளது.

இதனால் மக்கள் ரேஷன் கடைகளில் குவிந்து வருகின்றனர் பல்வேறு இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக இருப்பதை காண முடிகிறது. இதில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் கூட அது மற்றவர்களுக்கும் பரவ இருக்க வாய்ப்புள்ளது.

எனவே இதனை தவிர்க்க ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று நிவாரண நிதி மற்றும் இலவச அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என நேற்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் வழங்கும் ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்களை வீடு வீடாக சென்று மட்டுமே வழங்க வேண்டும் என அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |