திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஒண்ணுமே தெரியாத ஒருத்தன் வந்துட்டு இன்னைக்கு தளபதியை பத்தி தர குறைவாக பேசுகிறான் என்று சொன்னால், மனசாட்சி உள்ளவர்களே எண்ணிப் பார்த்திட வேண்டாமா? தமிழகத்தினுடைய முதலமைச்சர் தளபதி அவர்கள், இந்த குறுகிய காலத்திலே…. இந்த ஆட்சி வந்து இன்னும் 1 1/2 ஆண்டு முடியல. அதுக்குள்ளே எவளோ செஞ்சிருக்காரு.
பெண்களுக்காக 50 சதவீதம் உள்ளாட்சி தேர்தலில் இடம் கொடுத்திருப்பது மட்டுமல்ல, பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அவர் செய்திருக்கின்ற சாதனைகள். ஆட்சிக்கு வந்த உடனே கொரோனா நோய் தமிழகத்தை அதிகமாக தாக்கியது. அந்த கொரோனாவில் இருந்து உங்களை எல்லாம் விடுவிக்க வேண்டும் என்று சேகர் பாபு எல்லா சாமியையும் வேண்டிக்கிட்டாரு, எல்லா மக்களிடமும் சென்று, எல்லா வேலைகளையும் செய்தார்.
அப்படி செஞ்சிட்டு இருக்கும்போது தமிழக முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் எவ்வளவு கொடுத்தாரு? வாங்கினீங்க இல்ல. ஆட்சிக்கு வந்த உடனே எவ்வளவு நிதி நெருக்கடி இருந்த போதிலும், அனைத்து குடும்பங்களுக்கும் 4000 ரூபாய் வழங்கிய ஒரு முதல் அமைச்சரை பார்த்து ஒருத்தன் ( சிவி சண்முகம் ) சொல்றான் என்றால் அறிவு இருக்கா ? அதுமட்டுமா கொடுத்தார். பெண்கள் இன்னைக்கெல்லாம் பஸ்ல போறீங்களா? அம்பத்தூரிலிருந்து சென்னைக்கு எல்லாம் எப்படி போறீங்க?
ஹார்பர்க்கு ஒரு தடவை போயிட்டு வந்தவங்க, இப்ப ரெண்டு தடவை போறீங்க, நாலு தடவ போறீங்க. முதல்ல வீட்டுக்காரங்க கிட்ட போயி நான் ஊருக்கு போகணும், ஒரு அஞ்சு ரூபாய் இருந்தா குடுங்க அப்படின்னு கேட்டது போய், இப்போ உலகத்திலேயே இலவசமாக மகளிருக்கு பேருந்து வழங்கி இருக்கின்ற ஒரு முதலமைச்சர் தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சி நடத்துகின்ற நம்முடைய முதலமைச்சர் என தெரிவித்தார்.