Categories
மாநில செய்திகள்

20% பேருக்கு மட்டுமே அறிகுறி…. அதிலும் 7%,8% பேருக்குத்தான் தீவிர பாதிப்பு… முதல்வர் பேட்டி

கொரோனா பாதிக்கப்படுபவர்களில் 80% பேருக்கு அறிகுறிகள் ஏதும் இருப்பதில்லை என முதலமைச்சர் பழனிச்சாமி கூறியுள்ளார்.

சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 20% பேருக்கு மட்டுமே அறிகுறி தெரிகிறது. அதிலும், 7% அல்லது 8% பேருக்குத்தான் தீவிட பாதிப்பு ஏற்படுகிறது.

மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். கடைகளில் பொருட்களை வாங்கும் பொழுது இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்க வேண்டும். காய்கறி கடைக்கோ, இறைச்சி கடைக்கோ, வங்கிகளுக்கோ எங்கு சென்றாலும் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்து சென்றால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

ஒரே வழி இதுதான் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறாரகள். இதை மக்கள் தான் கடைபிடிக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு மூலமாக தான் நோய் பரவல் தடுக்க முடியும். ஸ்பீட் பிரேக் போடுவது போல,நோய் பரவலை தடுக்கத்தான் முழுஊரடங்கு. ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை. மருத்துவ வல்லுநர்கள் கூறும் வழிமுறைகளை அரசாங்கம் கடைபிடிக்கிறது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |