தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டுள்ள நிலையில், இன்றோடு கடைசி நாள் முடியப்போகிறது. இன்றைக்குள் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் கையெழுத்து போடாவிட்டால் மீண்டும் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் வந்துவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, தமிழகத்தில் ஆளுநர் அவர்கள் அரசியல் செய்யாமல் முதல்வரும் ஆளுநரும் ஒன்றிணைந்து ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களின் மூலம் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இனிமேல் ஏதாவது ஒரு உயிர் போனாலும் கூட அதற்கு ஆளுநர் மட்டும் தான் முழு பொறுப்பு என்று கூறினார். இந்நிலையில் ஆளுநர் அவர்கள் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு கையெழுத்து போட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு தமிழகத்தில் அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டம் இன்றுடன் காலாவதி ஆவதற்கு காரணம் ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காதது தான். ஒருவேளை சட்டம் காலாவதி ஆகிவிட்டால் மீண்டும் தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் மீண்டும் தலை தூக்கி விடும். கடந்த 15 மாதங்களில் 32 பேர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். மேலும் ஆளுநருக்கு அவசர சட்டம் இயற்றப்பட்டது அனுப்பப்பட்டதோடு அவருக்கு உரிய விளக்கமும் அளிக்கப்பட்டதால் இனியும் காலம் தாழ்த்தாமல் கையெழுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.