சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியான நிலையில் பொதுமக்கள் கடற்கரைக்கு வர தடை விதித்து சென்னை காவல் துறை உத்தரவிட்டு உள்ளது.
அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு நேரடியாக தான் நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் பரவியது.
இதையடுத்து கடற்கரை முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மெரினாவில் உள்ள சர்வீஸ் சாலையும் மூடப்பட்டது. மேலும் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வர அனுமதி இல்லை என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.