வெளிநாட்டில்இருந்துஇறக்குமதிசெய்யப்பட்டவெங்காயத்தால் மக்களைவேதனையிலிருந்து நீக்கும் விதமாக வெங்காயம் விலை சரிவு
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் வெங்காய விலை சற்று குறையத் தொடகியுள்ளது.வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு சந்தையில் 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரும் நாட்களில் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திண்டுக்கல் காய்கறி சந்தைக்கு நைஜிரியா நாட்டில் இருந்துவெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுஉள்ளது .வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் .வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் வெங்காயத்தின் விலை மலைபோல் உயர்ந்து உள்ளது. தட்டுப்பாடு காரணமாக உயர்ந்துள்ள வெங்காய விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.