Categories
தேசிய செய்திகள்

இனியாவது விலை குறையுமா….? நாடு முழுவதும் தடை….. மத்திய அரசு அதிரடி….!!

நாடு முழுவதும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து  மத்திய அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா  பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மக்களை ஒருபுறம் இந்த சுகாதார பிரச்சனை துன்புறுத்தி வரும் நிலையில், மற்றொரு புறம் விலைவாசி உயர்வும்  மக்களை துன்புறுத்துகிறது. ஏற்கனவே, ஊரடங்கினால்  பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து  பொருளாதாரம் சரிந்து சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பது மேலும் மக்களை துன்புறுத்துவதாக பார்க்கப்படுகிறது. எனவே இதை தடுப்பதற்காக முதற்கட்டமாக நாடு முழுவதும் அனைத்து வெங்காய ஏற்றுமதிக்கும்  தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு அறிவித்துள்ளது. 

Categories

Tech |