ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய இருவரை கைது செய்த போலீசார் டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள கருப்பூர் கிராமத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த டிராக்டர் ஒன்றை காவல்துறையினர் மறித்து விசாரணை செய்துள்ளனர்.
அப்போது டிராக்டரில் கருப்பூர் கண்மாய் பகுதியில் இருந்து அரசின் எந்தவித அனுமதி இல்லாமல் மணலை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதே ஊரை சேர்ந்த ரமேஷ்(48) என்பவரையும், சிறுவண்டல் பகுதியை சேர்ந்த காட்டு ராஜா(40) என்பவரையும் மணல் அள்ளிய குற்றத்திற்காக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் மணல் அள்ளி வந்த டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.