தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் மது விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தினகரபாண்டியன் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது காந்திகிராமம் பகுதியில் ரமேஷ் மற்றும் அவரது மனைவி காருண்யா(28) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவையும், 16,600 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கூடலூர் வடக்கு காவல்துறையினர் நடத்திய சோதனையில் அண்ணாநகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் அப்பகுதியில் மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் அவரை கைது செய்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.