Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா..? மது பிரியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஒயின் நிறுவனம்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

பிரிட்டனில் ஒயின் தயாரிப்பில் பணிபுரிய பிரபல ஒயின் நிறுவனம் ஒன்று மது பிரியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லண்டனில் அதிக முதலீடு இல்லாத காரணத்தினால் Renegade Urban Winery என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு ஊழியர்களை பணி அமர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒயின் தயாரிக்க ஆர்வத்தோடு பணிபுரிய வரும் மது பிரியர்களுக்கு ஒயின், உணவு உள்ளிட்டவை சம்பளத்துக்கு பதிலாக வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த Renegade Urban Winery என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆண்டுக்கு 80 ஆயிரம் ஒயின் பாட்டில்களை 15 திராட்சைத் தோட்டங்களிலிருந்து பெறப்படும் பழங்களை கொண்டு தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |