கணவன் கொலை செய்யப்பட்ட ஒரு மாதத்தில் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் வசிப்பவர்கள் மண்ணி குமார்-லலிதாதேவி (29) தம்பதிகள். குமார் ஒரு மாதத்திற்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து காப்பீட்டு தொகையாக குமாரின் பெயரில் 15 லட்சம் ரூபாய் லலிதாவுக்கு கொடுக்கப்பட இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று லலிதா அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் அவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து லலிதாவின் சகோதரர் கூறுகையில், “என் சகோதரிக்கு வர இருந்த காப்பீட்டு பணத்தை அவர் கணவரின் குடும்பத்தினர் வாங்கி கொள்வதற்காக திட்டம் போட்டுள்ளனர். இதனால் தினமும் அவரை கொடுமைப்படுத்தி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று வலுக்கட்டாயமாக அவரின் வாயில் விஷத்தை ஊற்றியதால் என் சகோதரி இறந்துள்ளார்” என்று கூறியுள்ளார். இதையடுத்து லலிதாவின் அத்தை மற்றும் மாமா மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.