ஐந்தில் ஒருவருக்கு செவிப்புலன் பிரச்சினை இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
உலகில் வாழும் மனிதர்களில் பல பேருக்கு செவிப்புலன் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனை வரும் நாட்களில் அதிகமாகாமல் இருக்க அதற்கான தடுப்பு மற்றும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் எதிர்காலத்தில் தொற்றுகள், நோய்கள், பிறப்பு குறைபாடுகள், வாழ்க்கை முறை தேர்வுகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு நம்மால் சுலபமாக தீர்வு காண முடியும்.
தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் ஒரு நபருக்கு 1.33 டாலர் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனை ஒப்புக் கொள்ளாமல் போனால் ஒவ்வொரு ஆண்டும் டிரில்லியன் கணக்கான டாலர்களை செலவழிக்கக் கூடும். மேலும் தகவல் தொடர்பு, கல்வி மற்றும் அனைத்து வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இருந்தும் செவிப்புலன் பாதிக்கப்பட்டவர்கள் நீக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.
அதனால் அவர்களுக்கு நிதி இழப்புகளும் அதிகரிக்கும். தற்போது ஐந்தில் ஒருவருக்கு செவிப்புலன் பிரச்சினை இருக்கிறது. இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால், வரும் 2050ஆம் ஆண்டிற்குள் செவிப்புலன் பிரச்சனையால் பலர் பாதிக்கபடுவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.